அன்றே சொன்ன ஸ்டாலின்.. சிக்னல் தந்த விஜய், அஜித்…

திமுக கட்சிக்கு ஆதரவாக நடிகர் விஜய் ,அஜித் ஆகியோர் குறியீடுகளை வெளியிட்டதாக இணையதளத்தில் வதந்தி பரவி வருகிறது.

அண்மையில் சன்டிவியில் ‘ஸ்டாலின் செய்வாரா’என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டது. இதில் பங்கேற்று இளைஞர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சினிமா பார்ப்பேன் என கூறியிருந்தார். அதிலும் இளைஞர்களை கவரும் விஜய் மற்றும் நவரசங்களை வெளிப்படும் அஜித்தின் திரைப்படங்களை பார்ப்பேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், ஸ்டாலினை மகிழ்விக்கவும், அவரது கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நேற்றைய வாக்குப்பதிவின் போது நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் குறியீடுகளை வெளியிட்டதாக வதந்தி பரவி வருகிறது. ஏற்கனவே, சைக்கிளில் வந்ததற்கு விஜய் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை ஏற்க மறுக்கும் இணையதள வாசிகள், அவரது சைக்கிள் வண்ண நிறங்களை குறிப்பிட்டும், அஜித் அணிந்திருந்த முககவசத்தின் வண்ண நிறத்தை குறிப்பிட்டும் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த மக்கள் எப்போது தான் நிதர்சனத்தை உணர்ந்து நடைமுறை வாழ்க்கைக்கு வருவார்களோ என்றும் சிலர் தங்கள் தரப்பு கருத்துகளையும் முன்வைக்கின்றனர்.