ஜெய்யின் பிறந்தநாளுக்கு சிம்பு கொடுத்த சர்பிரைஸ் விசிட்…!!!

பகவதி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக அறிமுகமான ஜெய், கோவா, எங்கேயும் எப்போதும், ஜருகண்டி, கேப்மாரி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக  நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்..

ஜெய் தனது எதார்த்த நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்..

இதற்கிடையே நேற்று அவர் தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் நேரிலும், சமூக வலைதளத்திலும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சிம்பு ஜெய் வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்தார்.

அவரது வீட்டில் கேக் வெட்டி ஜெய்-யின் குடும்பத்துடன் அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ஜெய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன