தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களை உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்த இயக்குனர் தான் டி.பி. கஜேந்திரன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் கலக்கியுள்ளார்.
இந்நிலையில் டி.பி .கஜேந்திரன் கடந்த சில வருடங்களாக சுவாச பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிகிறது. இதனால் படங்களிலும் சில காலங்களாக நடிப்பதை தவிர்த்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையை சிகிச்சை பெற்ற டி.பி. கஜேந்திரன் தற்போது குணம் அடைந்துள்ளார்.
எனவே டி.பி. கஜேந்திரன் அவர்களை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். டி.பி. கஜேந்திரனும் மு.க. ஸ்டாலின் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆகையால் நட்பு ரீதியாக மு.க. ஸ்டாலின், டி.பி. கஜேந்திரனை நலம் விசாரிக்கச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் சந்திக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.