வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய கிரிக்கெட் வீரர் வார்னர்

ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் உள்ளிட்ட வீரர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

கிரிக்கெட் உலகில் தற்போது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது.

முதலில் சையது முஷ்டாக் கோப்பை தொடரில் வெற்றிபெற்ற பின் தமிழக வீரர்கள் இந்த பாடலுக்கு நடனம் ஆடினார்கள். தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் இந்த பாடலுக்கு நடனம் ஆடியது பெரிய வைரலானது. அதன்பின் வரிசையாக இந்த பாடலுக்கு நடனம் ஆடினார்கள்.

இந்திய வீரர்கள் இடையே வைரலாக உள்ள வாத்தி கம்மிங் பாடல் தற்போது வெளிநாட்டு வீரர்கள் இடையிலும் வைரலாகி உள்ளது.

ஐபிஎல் ஆட இந்தியா வந்திருக்கும் வெளிநாட்டு வீரர்கள் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர். ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் உள்ளிட்ட வீரர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Back to top button