எனக்கு நீயும், உனக்கு நானும்….. பாகனை கட்டியணைத்த குட்டி யானை

பாகனை, ஒரு குட்டி யானை கட்டியணைத்தப்படி நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அன்பிற்கு மொழியோ, வார்த்தைகளோ தேவையில்லை என்பதற்கு ஒரு குட்டி யானையின் அரவணைப்பு எடுத்துக்காட்டியுள்ளது. வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருசுசந்தா நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குட்டியாணை அதன் பாகனைச் செல்லமாகக் கட்டியணைக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் பாகன் அப்பகுதியில் உள்ள குப்பைகளைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்.

அப்போது அவரை குட்டி யானை பாகனை செல்லமாக பின்னாடி இருந்து கட்டியணைக்கிறது. தன்னை இவ்வளவு நாள் பராமரித்த பாகனாக்கு தனது அன்பை இவ்வாறு அந்தக் குட்டியானை வெளிப்படுத்தியிருக்கிறது.

இப்புகைப்படத்திற்கு ‘ ”எனக்கு நீயும் உனக்கு நானும்” என்ற வாசகத்தை போட்டு வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Back to top button