
நடிகர் யோகிபாபு நடித்த காசே தான் கடவுளடா திரைபப்படத்தை தற்போது வெளியிடமாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது
75 லட்சம் ரூபாய் கடன்
சென்னை திருவான்மியூரை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை திநகரை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் தன்னை அணுகி, நடிகர் யோகி பாபு, மிர்ச்சி சிவா, நடிகை ப்ரியா ஆனந்த்,ஆகியோர் நடிக்கும் காசேதான் கடவுளடா திரைப்படத்தை எடுக்க ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும், படத்தை வெளியிடும் முன் பணத்தை திருப்பிக் கொடுப்பதாகக் கூறி ஒப்பந்தமும் செய்ததாகக் கூறியுள்ளார்.
இடைகால தடை
ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் தனக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படும் என்றும் பணத்தை திருப்பிக் கொடுக்கும் வகையில் காசேதான் கடவுளடா திரைப்படத்தை வெளியிட இடைகாலதடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணை வந்த போது, ராஜ்மோகன் தரப்பில், ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட பணத்தை செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதி பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரை படம் வெளியிடப்பட மாட்டாது என உத்திரவாதம் அளிக்கப்பட்டது.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 2ம்தேதி தள்ளிவைத்தார்.
மேலும் படிக்க | மாரியம்மன் கோவிலில் மாரியம்மா சாமி தரிசனம்