தனுஷை அட்டாக் செய்யும் சிம்பு… வெளியானது ஈஸ்வரன் டிரெய்லர்… வீடியோ உள்ளே

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, பாரதிராஜா, நடிகை நிதி அகர்வால் ஆகியோர் நடித்துள்ள படம் ஈஸ்வரன். பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இப்படத்தின் பாடல்களும், டீசரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு #EeswaranTrailer என்ற ஹேஸ்டேக்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்பு படம் விரைவில் படப்பிடிப்பு முடிந்து வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இப்படத்தினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
#EeswaranTrailer 🙏🏻#Eeswaran #EeswaranPongal #EeswaranFromJan14thhttps://t.co/FJXMk4Dgr2#Suseinthiran @MusicThaman @madhavmedia @DCompanyOffl @offBharathiraja @AgerwalNidhhi @Nanditasweta @Bala_actor @YugabhaarathiYb @DOP_Tirru @DuraiKv @DSharfudden
— Silambarasan TR (@SilambarasanTR_) January 8, 2021