பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து பிரிக்கப்படும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்.! காரணம் என்ன?

உலகின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக தற்போது பேஸ்புக் நிறுவனம் திகழ்கிறது. அந்த நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவின் பலவேறு மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேஸ்புக்கின் முக்கிய துணை நிறுவனங்களான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பேஸ்புக் விற்கும் சூழல் கூட வரலாம் என்று கூறப்படுகிறது.
பேஸ்புக் கூகுள் போன்ற நிறுவனங்கள் மீது நீண்ட நாட்களாகவே பிற நிறுவனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன என்றும், பிற நிறுவனங்களை வளர விடாமல் செய்கின்றன என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அதை உறுதி படுத்தும் விதமாக தனக்கு போட்டியாக வளர்ந்த வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. கூகிளும் இது போன்ற போட்டி நிறுவனங்களை வாங்கி தன்னை வளர்ந்து கொண்டது.
பேஸ்புக்கின் இந்த போக்கை காரணம் காட்டியே இப்போது அமெரிக்காவின் 46 மாகாணங்களில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கூகிள் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இப்போது பேஸ்புக் நிறுவனத்தின் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கை பதிவு செய்த வழக்கறிஞர்கள் சிலர் பேஸ்புக்கின் நிறுவனங்களான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதன் காரணமாக வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை பிரிக்கப்படலாம் அதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று பல்வேறு ஆங்கில செய்தி தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
I am constantly looking online for tips that can aid me. Thanks!