இந்தியா

விவாகரத்து கோரும் பிரபல ஐஏஎஸ் ஜோடி… திருமணத்தை கொண்டாடிய இணையவாசிகள் அதிர்ச்சி…

சமூகவலைத்தளங்களில் பிரபலமான ஐஏஎஸ் தம்பதியினர் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் டெல்லியைச் சேர்ந்த டினா தாபி முதலிடத்தையும், காஷ்மீரைச் சேர்ந்த அதர் அமீர் உல் ஷஃபி கான் என்ற நபர் இரண்டாம் இடமும் பிடித்தனர். பயிற்சி வகுப்புகளிடையே முதல்முறையாக சந்தித்த இருவரும் காதலித்தனர்.

3 ஆண்டுகள் காதலுக்கு 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த டினா தாபியும், இஸ்லாமிய இளைஞரான அதர் அமீரும் செய்துக்கொண்ட திருமணத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர். டினா தாபி ‘காஷ்மீரின் மருமகள்’ என கொண்டாடப்பட்டார்.

இந்நிலையில் இந்த ஜோடி தற்போது விவாகரத்துக்கோரி ஜெய்ப்பூர் குடும்ப நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இருதினங்களுக்கு முன்பு டினா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், அதர் அமீரின் கணக்குகளை தான் பின்தொடரப்போவதில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button