கவர் ஸ்டோரிதமிழ்நாடு

ப்ளீஸ் என்னை வேதனைப் படுத்தாதீர்கள் ரசிகர்களிடம் கெஞ்சும் ரஜினி – ரஜினியை கதற விடும் ரசிகர்கள் ;

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, ’ரஜினி அரசியலுக்கு வருகிறார்’ என்ற வாக்கியத்தை, கடவுளுக்கு காணிக்கை செலுத்துவது போல, குறைந்தது ஆயிரத்து எட்டு தடவையாவது படித்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால், தமிழக அரசியல் களத்தில் பொன் குதிரை எனக் கருதப்பட்டு வந்த ’ரஜினியின் அரசியல் பிரவேசம்’ மண் குதிரையாகிப் போனதை அவரது ரசிகர்களால் அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியவில்லை. போருக்குத் தயாராகி வந்தவர்களின் கண் முன்னே ’ரஜினியின் பேச்சு’ வந்து கொண்டே தான் இருக்கும்.

கடந்த 2 ஆயிரத்து 17 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, தன்னுடைய அரசியல் என்ட்ரி குறித்துப் பேசிய ரஜினி, சிஎஸ்கே அணிக்கு தோனி ஒரு ஸ்பார்க்கை எதிர்பார்த்ததைப் போல, ’இப்போ இல்லைனா எப்பவும் இல்லை’ எனப் பேசி, தமிழக அரசியலில் தாம் எதிர்பார்த்த ஒரு எழுச்சியை உருவாக்க எண்ணினார்.

மக்களுக்காக உயிரே போனாலும் சரி’ எனக்கூறி, ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்த ரஜினி, திடீரென அடித்த அந்தர்பல்டி அவரது ரசிகர்களை ஆட்டங்காணச் செய்தது. ஆம், இப்போதும் அதே தான், ’உயிர் போனாலும் பரவாயில்லை. ஆனால், நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை’ எனவே, உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என அதிர்ச்சி கொடுத்தார்.

என்றைக்காவது ஒருநாள் அரசியலுக்கு வருவார், வாழ்க்கைத் தருவார்’ என்ற நம்பிக்கையில், வீதி வீதியாய் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும், உயிரைப் பணயம் வைத்து கட்-அவுட்டுகள் நிறுத்தி, பட்டாசு வெடித்துப் பாலாபிஷேகம் செய்தவர்களுக்கும், கட்சி அறிவிப்புக்காக காத்துக் கிடந்தவர்களுக்கும் மிஞ்சியது என்னவோ ஏமாற்றமும், மன்னிப்பு மடலும் தான்…

இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அவரது ரசிகர்கள் அறவழி போராட்டம் நடத்தினர். இதில் தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துக் கொண்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தி ’வா தலைவா வா’ என முழக்கமிட்டனர்.

ரஜினியிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே. ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்டுபாடுடனும், கண்ணியத்துடனும் நடந்துக் கொண்டது பாராட்டுதலுக்கு உரியது என்றும், அதேசமயம் மன்ற தலைமையின் உத்தரவினை மீறி செயல்பட்டது வேதனையளிப்பதாகவும், வேண்டுகோளை ஏற்று இதில் பங்கேற்காத அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலுக்கு வரவேண்டுமென்று வற்புறுத்தி வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனாலும், நான் இப்பொழுது அரசியலுக்கு வர முடியாததற்கான காரணம் என ரஜினி குறிப்பிட்டுள்ளதால், ரஜினி என்ன சொல்ல வருகிறார்? இப்போது வரவில்லை எனக் கூறுவதால், கொரோனா முடிவுக்கு வந்தால் வருவாரா? என்ற கேள்வியும் ரசிகர்களிடையே தோன்றியுள்ளது.

அதேபோல் அரசியலுக்கு வர வற்புறுத்தி வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என ரஜினி குறிப்பிட்டுள்ளதால், ’தனது அரசியல் பிரவேசத்தை உறுதிசெய்த 3 ஆண்டுகளுக்குள் 3 படங்களை முடித்து 4 ஆவது பட வேலையில் மும்முரம் காட்டிய ’அண்ணாத்த’, கட்சி தொடங்குவதிலும் காட்டி இருந்தால், இந்நேரம் கட்சியும் வளர்ந்திருக்கும், 2 ஆயிரத்து 21-ல் அற்புதம், அதிசயம் நடந்திருக்கும்’ என்றும், இத்தனை ஆண்டுகளாக அவரையே நம்பிக் கிடந்த ரசிகர்களே, மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாலைமுரசு செய்திகளுக்காக சிகாமணி.

Related Articles

12 Comments

 1. Do you mind if I quote a couple of your articles as long as I provide
  credit and sources back to your website? My website is in the very
  same area of interest as yours and my visitors would definitely benefit from some of
  the information you present here. Please let me know if this alright with you.
  Thank you!

 2. Hello! I understand this is somewhat off-topic however I had to ask.
  Does managing a well-established website like yours require a massive amount work?
  I am brand new to running a blog however I
  do write in my journal on a daily basis. I’d like to start a blog
  so I can easily share my own experience and views
  online. Please let me know if you have any kind of ideas or tips for new aspiring bloggers.
  Appreciate it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button