இந்தியா

கலவர பூமியாக மாறியது டெல்லி… தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தியதாக விவசாயிகள் மீது தடியடி…

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசியதால் அந்த இடமே போர்க்களம் போல் மாறியுள்ளது.

Image

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு போராடும் விவசாயிகளோடு 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான உடன்பாடுகள் எட்டப்படவில்லை.

இதற்கிடையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வண்ணம் குடியரசு தினத்தில் நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடத்தவும் விவசாயிகள்  திட்டமிட்டிருந்தனர். முதலில் டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீஸ் அனுமதி மறுத்தது. ஆனால் குடியரசு தினவிழாவுக்கு எவ்வித இடையூறு ஏற்படாத வண்ணம் பேரணி நடத்தி கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.

இதனால் டிராக்டர் பேரணி மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுக்க தொடங்கினர். மேலும் போலீசார் கூறிய நிபந்தனைகளின் படி காலை 10 மணிக்கு மேல் தான் டிராக்டர் பேரணி நடைபெற வேண்டும், சிங்கு, டிக்ரி உள்ளிட்ட விவசாயப் போராட்டங்கள் பெருமளவில் நடக்கும் எல்லைப் பகுதிகளில் இருந்துதான் இந்த டிராக்டர்கள் டெல்லிக்குள் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Farm law protests LIVE: Ahead of tractor rally, police use tear gas, lathicharge at Singhu border

முன்னதாகவே அங்கு தடுப்பரண்கள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் அதனை உடைத்துக் கொண்டு டெல்லிக்குள் விவசாயிகள் 10 மணிக்கு முன்னதாகவே நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை தடுக்கும் வண்ணம் சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதிக்கு வந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டு, தடியடி நடத்தப்பட்டது.

Image

இதனால் அப்பகுதியே போர்களம் போல் காட்சியளிக்கிறது. விவசாயிகள் மீதான இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் குவிந்து வருகின்றது.

 

 

Related Articles

10 Comments

 1. Hey there, I think your blog might be having browser compatibility issues.
  When I look at your website in Ie, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping.

  I just wanted to give you a quick heads up! Other
  then that, amazing blog!

 2. Excellent post. Keep posting such kind of information on your page.

  Im really impressed by your blog.
  Hi there, You’ve done a fantastic job. I will certainly digg it and in my
  view recommend to my friends. I am sure they’ll be benefited from this web site.

 3. Thanks , I’ve recently been looking for information about this subject for a long time and yours is the best I have found out so far.
  But, what in regards to the conclusion? Are you certain about the
  supply?

 4. You could definitely see your expertise within the work you write. The sector hopes for even more passionate writers like you who are not afraid to say how they believe. All the time follow your heart. “If the grass is greener in the other fellow’s yard – let him worry about cutting it.” by Fred Allen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button