இந்தியா

சிறுத்தை கறி சாப்பிட்ட 5 பேர் கைது…10 கிலோ இறைச்சி பறிமுதல்

கேரளாவில் சிறுத்தையை கொன்று சாப்பிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கியின் மங்குளத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த புதன்கிழமை சுமார் 6 வயதுடைய ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது. தனியார் நிலத்தில் வினோத் என்ற நபர் வைத்த அந்த கூண்டில் சிறுத்தை சிக்கியவுடன் குரியகோஸ் என்பவருடன் இணைந்து, வினோத் வீட்டிற்கு சென்று அங்கு தனது நண்பர்கள் 3 பேருடன் இணைந்து அதனைக் கொன்று, சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

தகவறிந்து அவரது வீட்டிற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் பல், தோல், 10 கிலோ இறைச்சி ஆகியவற்றை மீட்டதோடு சம்பவத்தில் தொடர்புடைய வினோத், குரியகோஸ், பினு, சாலி, வின்சென்ட் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Five arrested in Kerala for killing leopard and consuming its meat | India News,The Indian Express

இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என வனத்துறை அதிகாரி சுஹைப் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button