தமிழ்நாடு

தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் – பொதுமக்கள் அவதி

தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம், கரையோரமுள்ள கோவில்கள், குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள், நிரம்பி வருகின்றன. இந்நிலையில், பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 25 ஆயிரம் தண்ணீர் மற்றும் இதர துணை ஆறுகளின் மூலமாக தாமிரபரணியில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

இதனிடையே, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரையோரமுள்ள கோவில்களில் வெள்ளம் புகுந்தது. மேலும் பெரும்பாலான விளை நிலக்களும் நீரில் மூழ்கி போயின.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் ஆலடியூர், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி, விக்கிரம சிங்கபுரம், பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாபநாசத்தில் யானைப் பாதைப் பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்வதால், பாபநாசத்திற்கு போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது.

மேலும் மாஞ்சோலை மலைப்பகுதிக்குச் செல்லும் மலைச்சாலையில் மண்சரிவு மற்றும் சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்துத் தடைபட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button