தமிழ்நாடுதிண்டுக்கல்

600 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் 40 லட்ச ரூபாய் மோசடி தந்தை மகன் கைது;

வெளிநாட்டில் 600 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் 40 லட்ச ரூபாய் மோசடி தந்தை மகன் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஜீவா இவர் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இ ந்நிலையில் இதே ஊரைச் சேர்ந்த சஞ்சீவி அவரது மகன் இமானுவேல் ஆகிய இருவரும் ஜீவாவிடம்  மாலத்தீவில் ரூபாய் 200 கோடி அளவில் ஒப்பந்த முறையில் கட்டுமான பணிகள் கட்ட வேண்டும் .அங்கு பணி செய்தால் அதிக அளவு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்

இதை நம்பிய ஜீவா இதற்கு முதலீடு அதிக அளவில் தேவைப்படும் அதற்கு என்னிடம் போதிய தொகை இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் வெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கிக்கொள்ளலாம் நாங்களே உங்களுக்கு  600 கோடி ரூபாய்  கடன் வாங்கித் தருகிறோம் என்று கூறி   40 லட்சம் முன் பணம் கொடுத்தால் கடனை உடனடியாக  பெற்று விடலாம் என்று கூறியுள்ளனர்

இதை நம்பிய ஜீவா அவர்களிடம் ரூபாய் 40 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி கட்டுமானம் ஒப்பந்தம் எடுத்து கொடுக்கவல்லை. இதையடுத்து ஜீவா தான் கொடுத்த 40 லட்சத்தை திரும்ப தரக்கோரி பல மறை கேட்டுள்ளார்.

தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜீவா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

கண்காணிப்பாளர் உத்தரவின் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தந்தை மகன் இருவரிடமும் விசாரணை நடத்தினர் விசாரணையில் இவர்கள் ஜீவாவிடம் ரூபாய் 40 லட்சம் நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button