இந்தியாகிரைம்

ஓடும் பைக்கில் 22 வயது காதலனை முதுகில் குத்திக் கொன்ற 21 வயது காதலி – கொடூரமாக கொன்றார்

உங்கள் பையனின் டெட் பாடியை எடுத்துச் செல்லுங்கள் என போன் போட்டு மாமனார் வீட்டிற்கும் தகவல் சொல்லியுள்ளார் இளம்பெண்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவானி தாலப்புடி கிராமத்தைச் சேர்ந்த டாட்டாஜி நாயுடு ஆகிய இருவரும் பள்ளி பருவ காதலர்கள். இருவரும் பல ஆண்டுகள் கணவன் மனைவியாக ஊருக்கு தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். மேலும்  குடும்பத்தினர் உட்பட யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்துள்ளனர். ஆனால் தன்னை ஊரறிய திருமணம் செய்ய வேண்டும் என டாட்டாஜியை சந்திக்கும் போதெல்லாம் பவானி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் டாடாஜி நாயுடு, அந்த பெண்ணிடம் அவ்வப்போது, பணம் கேட்டு நச்சரித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, தொடர்ந்து, பணம் கேட்டும் நச்சரிப்பதால், விரக்தியடைந்த பவானி, காதலனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.  இருவரும் பைக்கில் நாள் முழுவதும்  சுற்றிய நிலையில் பவானியை மீண்டும் அவர் வீட்டில் விட டாடாஜி அழைத்து சென்றுள்ளார்.

அப்போது தான் வைத்திருந்த கத்தியால் டாடாஜி நாயுடுவின் முதுகில் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில், கழுத்தை அறுத்து, பின் மண்டையிலும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். நடு சாமத்தில் நடு ரோட்டில் அரங்கேறிய இந்த சம்பவத்தை பார்த்து, அந்த சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு போன் செய்துள்ளனர்.

இதனிடையே டாடாஜியின் தாய்க்கு போன் செய்து உங்கள் மகனை கொன்றுவிட்டேன், உடலை வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என சர்வசாதாரணமாக பவானி கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, கத்தியுடன் பத்ரகாளிபோல் நின்றிருந்த, பவானியை கைது செய்து அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். இளைய தலைமுறையினர் உயிருக்கு உயிராக காதலிக்கும் போது, அதனை மதித்து பெற்றோர் ஏற்றுக் கொள்ளாவிட்டால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியாது என்பதே படிப்பினை.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button