எலெக்ட்ரானிக்ஸ்

புது ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா… இதை கண்டிப்பா படிங்க…

நிச்சயம் இந்த வரி விதிப்பு மொபைல் போன்களின் விற்பனையை பாதிக்கும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் அரசின் வரிவிதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கும் என ஐசிஇஏ தெரிவித்துள்ளது.

தற்கால உலகில் ஸ்மார்ட்போன்கள் இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது. ஸ்மார்ட் சிட்டி தொடங்கி அடிப்படை வசதி கூட இல்லாத கிராமத்தில் கூட இன்றைக்கு ஸ்மார்ட்போன்கள் சர்வசாதாரணமாக பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் ஸ்மார்ட்போன்களுக்கான முக்கிய பாகமாக கருதப்படும் டிஸ்பிளே இறக்குமதிக்கு மத்திய அரசு 10% வரி விதித்துள்ளது.

பெரும்பாலும் டிஸ்ப்ளேக்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை குறைத்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க அரசு முயற்சி எடுத்து ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்கு கால அவகாசம் அளிக்கும் பொருட்டு கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட வேண்டிய இந்த இறக்குமதி வரி கால தாமதம் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிவிதிப்பினால் ஸ்மார்ட்போன்களின் விலை 1.5 % முதல் 5% வரை உயர வாய்ப்புள்ளதாக இந்திய செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ஐசிஇஏ) தலைவர் பங்கஜ் மோஹிண்ரு தெரிவித்துள்ளார். இந்தியாவில் பண்டிகை காலங்கள் தொடங்க உள்ளதால் அதிகளவு மொபைல் விற்பனை நடைபெறும். அந்த நேரத்தில் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

6 Comments

  1. After study a few of the blog posts on your website now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark website list and will be checking back soon. Pls check out my web site as well and let me know what you think.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button