இந்தியா

ஒருநாள் முதலமைச்சராக பதவியேற்கும் கல்லூரி மாணவி… பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்வார் என அறிவிப்பு

தேசிய பெண்  குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலத்தின்  முதலமைச்சராக  கல்லூரி மாணவி ஒருவர் செயல்பட உள்ளார்.

நாடு முழுவதும் நாளை (ஜனவரி 24)  தேசிய பெண்  குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மாநிலங்களும் பெண்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புகளை செய்ய திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில்  ஹரித்துவாரைச் சேர்ந்த  ஸ்ரீஸ்தி கோஸ்வாமி என்ற கல்லூரி மாணவி உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதலமைச்சராக  செயல்பட உள்ளார்.   இவர் அம்மாநிலத்தின்  கோடைக்காலத் தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில் பணியாற்ற உள்ளார்.

இதனை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், வாழ்நாளில் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். மேலும்  இளைஞர்கள் மிகச் சிறந்த முறையில் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் பொருட்டு தன்னுடைய செயல்பாடுகள் இருக்கும் எனவும் ஸ்ரீஸ்தி கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

ஒருநாளில் அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை ஸ்ரீஸ்தி  ஆய்வு செய்ய உள்ளார். இவர் தான் 2018 ஆம் ஆண்டு முதல் உத்தரகண்ட் மாநிலத்தின் சிறுவர்களுக்கான சட்டசபையில் முதலமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

16 Comments

 1. Hello there, I found your blog by the use of Google whilst searching for a comparable subject, your
  site came up, it seems to be good. I have bookmarked it in my
  google bookmarks.
  Hi there, simply was aware of your weblog through Google, and found
  that it is really informative. I am gonna watch out for brussels.
  I’ll be grateful if you continue this in future. Numerous people will be benefited out of your writing.

  Cheers!

 2. Have you ever considered creating an ebook or guest authoring on other blogs?
  I have a blog based upon on the same information you discuss
  and would love to have you share some stories/information.
  I know my readers would value your work. If you are even remotely
  interested, feel free to shoot me an email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button