இந்தியாகவர் ஸ்டோரிகிரைம்வைரல்

19 வயதுப் பெண் முதுகெலும்பு உடைக்கப்பட்டு பலாத்கார கொலை – விசயத்தை மறைக்க இப்படியுமா?!

செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர் மீது UAPA சட்டம் – 60 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த நிலையில் மேலும் 180 நாட்கள் சிறை

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில், 19 வயது தலித் இளம்பெண்ணை, தாக்கூர் சாதியை சேர்ந்த 4 இளைஞர்கள், கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்து, அந்த பெண்ணின் முதுகு எலும்பை உடைத்து, நாக்கைத் துண்டித்து, கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் சிகிச்சை பலன் இன்றி அந்த பெண் 10 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தால், உத்தரப்பிரதேச அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், உடலை வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்ற அச்சத்தில், காவல்துறையினரே அந்த பெண்ணின் உடலை எரித்தனர். இது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற, கேரள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பான் உள்ளிட்ட 4 பேர் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்தது.

நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை ஒடுக்குவதாக கூறி முன்னர் மத்திய பாஜக அரசு பொடா என்ற சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டம் அரசியல் ரீதியாக பழிவாங்குதற்கு கொண்டு வரப்பட்டதாக கூறி, காங்கிரஸ் அரசு பதவிக்கு வந்ததும் நீக்கப்பட்டது. மீண்டும் பாஜக பதவிக்கு வந்ததால், பொடா சட்டத்திற்கு நிகராக UAPA சட்டம் கொண்டு வரப்பட்டது. நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் மீது பதிவு செய்யப்பட வேண்டிய இந்த சட்டத்தை, பாலியல் பலாத்கார வழக்கு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர் மீது உத்தரப்பிரதேச அரசு பிரயோகித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சித்திக் காப்பான் உள்ளிட்டவர்கள் அக்டோபர் 5 ஆம்தேதி கைது செய்யப்பட்ட நிலையில், 43 நாட்கள் கழித்தே, வழக்கறிஞரிடம் பேச அனுமதித்தனர். சித்திக் காப்பான் தங்கிருந்த சிறைக் கூடத்தை பார்வையிட்ட அவரது வழக்கறிஞர் மேத்யூ, இந்த சிறையில் அடைக்கப்படும் கைதிகள் உயிரோடு வெளியே வர வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். அவ்வளவு கொடூரமாக சிறை இருந்ததாகவும், தான் சிறைக்குள் சென்றபோது, ஜன்னல் வழியாக கைதிகள் அலறி, தங்களை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் சித்திக் காப்பான் உள்ளிட்ட 4 பேரை, மேலும் 180 நாட்கள் வரை போலீசார் விசாரிக்க மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஒரு பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர் மீது கொடூர வழக்கை பதிவு செய்ததோடு, தொடர்ந்து, அரசு அடக்குமுறையுடன் நடந்து கொள்வது சக பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்துவதாக கேரளா ஒர்கிங் ஜேர்னலிஸ்ட் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டும், சித்திக் காப்பான் உள்ளிட்டோருக்கு எந்த நீதியும், நிவாரணமும் கிடைக்கவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button