உலகம்

’சாப்பாடு கொடுங்கனு’இனி பூனையே கேட்கும்..வந்துவிட்டது மியாவ் ஆப்

மனிதர்களாகிய நாம் சக மனிதர்களுடன் நேரம் செலவிடுவதை விட நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடனே அதிக நேரம் இருக்கின்றனர்.தற்போது பூனை பிரியர்களுக்காகவே மியாவ் டாக் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.

அமேசானில் அலெக்ஸாவுக்காக வேலை செய்த முன்னாள் பொறியாளர் ஒருவர் இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.இந்த செயலியின் பெயர் மியாவ் டாக் ( meow talk).இந்த செயலி முதலில் உங்கள் பூனை சத்தத்தை பதிவு செய்துக்கொண்டு,அதன் பொருளை சொல்ல பின்பு முயற்சிக்கிறது.இதில் இதுவரை 13 சொற்கள் மட்டுமே ஏற்றப்பட்டுள்ளதாம். ‘எனக்கு பசிக்குது, சாப்பாடு கொடுங்க, என்னை தனியா விடுங்கள் போன்ற சொற்கள் மட்டுமே இருக்கிறதாம்.

இந்த செயலி தனது ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் பயனர்கள் பல விமர்சனங்களை கூறி வருகின்றனர்.சிலர் இந்த செயலியை பயன்படுத்த மிகவும் பிடித்துள்ளது எனவும், சிலர் இதை பயன்படுத்த முடியவில்லை எனவும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button