காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே உண்மையான தேசியவாதி – நூலகம் திறந்த இந்து மகாசபை அமைப்பு

மத்திய பிரதேசத்தில் நாதுராம் கோட்சே பெயரில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் மகாத்மா காந்தியின் படுகொலைக்கு கோட்சே எவ்வாறு சதி செய்தார் என்பதற்கான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது.
காந்தியைக் கொன்ற குற்றத்திற்காக 1949 நவம்பர் 15 ஆம் தேதி கோட்சே அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டார். அந்த தினத்தை இந்து மகாசபை அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தியாக நாளாக கொண்டாடி வருகிறது. மேலும் கோட்சே ஒரு தேசப்பக்தர் என பாஜகவினர் கூறி வரும் நிலையில் மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் அகில இந்திய பாரதிய இந்து மகாசபா சார்பில் இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
இது மகாத்மா காந்தியின் படுகொலைக்கு காரணமான நாதுராம் கோட்சேவின் வாழ்க்கை மற்றும் கொள்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மையான தேசியவாதத்தை வளர்க்க விரும்புவதாக இந்து மகாசபா கூறியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மகாசபை தேசிய துணைத் தலைவர் ஜெயவீர் பரத்வாஜ், “இந்தியப் பிரிவினையின் அம்சங்கள்” குறித்து இளம் தலைமுறையினருக்குத் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு தேசியத் தலைவர்கள் பற்றிய தகவல்கள் இந்த நூலகத்தில் இடம் பெறும் என தெரிவித்தார்.
மேலும் கோட்சே போன்ற என்ற ஒரு உண்மையான தேசியவாதியை உலகிற்கு முன் வைக்கவே நூலகம் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கோட்சே பிரிக்கப்படாத இந்தியாவுக்காக நின்று இறந்ததால், அவரைப் பற்றி அறியாத இளைஞர்களுக்காகவே இந்த நூலகம் என தெரிவித்துள்ளார்.
browse tinder for free , tider https://tinderdatingsiteus.com/