சென்னைதமிழ்நாடு

சென்னை வந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா !!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். அவரை முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.

தமிழகத்தில் 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், இன்று மாலை நடைபெறுகிறது.

தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கம் அர்ப்பணிப்பு மற்றும் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டப் பணிகள், சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்தியன் ஆயில் நிறுவன திட்டப்பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது

. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அமித் ஷா, அங்கு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்த படி, சிறிது தூரம் நடந்து சென்றார்.

விமான நிலையம் தொடங்கி ராஜ்பவன் வரை, அமித் ஷாவுக்கு அதிமுக, பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக தொண்டர்கள் ஆடிப்பாடி உற்சாகத்துடன் அமித் ஷாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலையோரங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்குச் செல்லும் அமித் ஷாவை, முக்கியத் தலைவர்கள் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாலையில், நட்சத்திர விடுதியில் இருந்து புறப்படும் அமித் ஷா, கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு மட்டும் 800 முதல் ஆயிரம் போலிசார் வரை குவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கல் தெரிவிக்கின்றன. இதனிடையே, அமித் ஷா, தங்கவுள்ள நட்சத்திர விடுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டுச் சோதனை நடத்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button