கடலூர்கவர் ஸ்டோரிதமிழ்நாடு

இப்படி ஒரு காதலா!!! காதல் மனைவி இறந்தவுடன் தனது கையை அறுத்து கொண்டு கணவர் தற்கொலை ;

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கிராம நிர்வாக அலுவலர் கை அறுத்தம், தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர்  பினுகுட்டன் (35) இவரது மனைவி ரோஸி 32 இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர்

திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் 11 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகன் உள்ளனர் திடீரென கடந்த 06.08.2020 அன்று அவரது மனைவி உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்

அன்றுமுதல் மன வருத்தத்தில் இருந்த பினுகுட்டன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் பணிக்கு வந்துள்ளார் இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அனைவரிடமும் பேசிவிட்டு பெண்ணாடம் திட்டக்குடி சாலையில் உள்ள விடுதி ஒன்றில் இடது கை மணிகட்டை அருத்துகொன்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் நீண்ட நேரம் அறை திறக்காததால் அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் தங்கியிருந்த அறை உள்பக்கமாக பூட்டி இருந்ததால்  போலீசார் கதவை உடைத்து பினுகுட்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணாடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் தனது காதல் மனைவி இறந்ததால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

2 Comments

 1. Hi there! Do you know if they make any plugins to help with SEO?
  I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m
  not seeing very good success. If you know of any please share.
  Thank you!

 2. Greetings, I do think your site may be having internet browser compatibility
  problems. Whenever I take a look at your blog in Safari, it looks fine however,
  when opening in Internet Explorer, it’s got some overlapping issues.
  I just wanted to provide you with a quick heads up!
  Besides that, wonderful blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button