கிரைம்

பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் – பெண் மீது கொலைவெறி தாக்குதல்

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞர் ஒருவரை ஜெயிலுக்கு அனுப்பிய பெண் மீது இளைஞர் ஒருவர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், கொர்லகுண்டா பகுதியை சேர்ந்த ராகுல் தோட் என்பவர் அதே பகுதியை சேர்ந்த விமலா என்பவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் விமலா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுலை கைது சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் நேற்று வெளியே வந்தவுடன் தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய பெண்ணை கொலை செய்து விட வேண்டும் என எண்ணி அவரது வீட்டிற்கு பெரிய கோடாரியுடன் இரு சக்கரவாகனத்தில் வந்த ராகுல், மற்றொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த விமலாவை, கையில் வைத்திருந்த கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமுற்ற அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராகுல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

3 Comments

  1. This is the right blog for anyone who desires to seek out out about this topic. You understand a lot its nearly arduous to argue with you (not that I really would want…HaHa). You definitely put a new spin on a topic thats been written about for years. Great stuff, just great!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button