சென்னைதமிழ்நாடு

மு.க.அழகிரியையும் பாஜகவுக்கு அழைத்து வருவேன்-முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் உறுதி ;

மு.க.அழகிரியையும் பாஜகவுக்கு அழைத்து வரப் போவதாக, அக்கட்சியில் இணைந்த கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றை மத்திய அரசும், தமிழக அரசும் சரியாகக் கையாளவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டிய போது, அதை எதிர்த்து கருத்து தெரிவித்ததற்காக திமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் கே.பி.ராமலிங்கம்.

திமுகவின் முன்னாள் எம்.பி.யான அவர், சனிக்கிழமை அன்று, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.ராமலிங்கம், மு.க. அழகிரியிடம் தமக்கு நல்ல உறவு இருப்பதாகவும், எனவே அவரையும் பாஜகவுக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button