இனி பணம் எடுக்க ஏடிஎம் கார்டு தேவையில்லை…அனைத்து வங்கிகளுக்கும் பயன்படுத்தலாம் என அறிவிப்பு…

ஐசிஐசிஐ வங்கி பணப்பரிமாற்றம் மேற்கொள்வதற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை ஒவ்வொரு வங்கிகளும் எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஏடிஎம்களில் டெபிட் கார்டு மூலம் நாம் பணம் செலுத்தும் போதும் , எடுக்கும் போதும் பல்வேறு விதமான பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக புகார் எழுந்தன.
இந்நிலையில் பணப்பரிமாற்ற சேவைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ஐசிஐசிஐ வங்கி iMobile Pay என்ற செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் மெஷினில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் நாம் எளிதாக பணம் பெறலாம். இதனால் பல்வேறு விதமான சைபர் மோசடிகள் தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் இந்த செயலியை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.
இதன்மூலம் தினமும் இந்த செயலியை பயன்படுத்தி ரூ.20 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய https://www.icicibank.com/mobile-banking/imobile.page என்ற இணையதளத்தை பார்க்கவும்.
jEilpVqFWMsCDKeS
I’m really enjoying the design and layout of your site. It’s a very easy on the eyes which makes it much more pleasant for me to come here and visit more often. Did you hire out a designer to create your theme? Great work!
tindr , tinder app https://tinderdatingsiteus.com/