தமிழ்நாடு

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு குறித்து வெளியான முக்கிய தகவல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து மார்ச் 4ஆம் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியின் சட்டப்பேரவை பதவிக் காலமும் நிறைவு பெறுகிறது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

5 மாநிலத் தேர்தல் தேதிகளை இறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையத்தின் முழு ஆணையக் கூட்டம் இன்று கூடியது. இதில், மார்ச் 4ஆம் தேதி அன்று, தேர்தல் தேதிகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் தேதி அறிவித்த பிறகு, அடுத்த 2 மாதங்களுக்கு தேசியத் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால், 3ஆம் தேதி அன்றே மத்திய அமைச்சரவை கூடி, பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button