தமிழ்நாடு

சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கையில் தகவல்

மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, நடக்க ஆரம்பித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்னைத் தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவருக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்குதல் தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளதாகவும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், உணவை அவரே எடுத்துக் கொள்வதாகவும், சக்கரை அளவு அதிகரித்துள்ளதால் அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ள கூறியுள்ள மருத்துவமனை நிர்வாகம், சசிகலா உறுதுணையோடு நடப்பதாகவும் தெரிவித்துள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 97 சதவீதமாக உள்ள நிலையில், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து சிகிச்சைகளுக்கும் சசிகலா ஒத்துழைப்பு கொடுப்பதாகவும்மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button