ஆஸி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? – இன்று 2வது ஒருநாள் போட்டி

ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த நிலையில் 2வது போட்டி இன்று அதே மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல் போட்டியை பொறுத்தவரை இந்தியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி எளிதாக 374 ரன்கள் குவித்தது. அதேபோல் பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அணியில் பார்ட் டைம் பவுலர்கள் இல்லை என கேப்டன் விராட் கோலி தோல்விக்கு காரணமாக கூறினார்.
இதனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டி காலை 9.10 மணிக்கு தொடங்குகிறது.
how to use tinder , tinder app https://tinderdatingsiteus.com/
dating sites free http://freedatingsiteall.com