விளையாட்டு

சிட்னியில் கெத்து காட்டிய ஜடேஜா… 338 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா…

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில்ன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சிட்னியில் நேற்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸி., அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டம் மழையால் தாமதப்பட 55 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. அதன் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது.

சிறப்பாக விளையாடி வந்த  லபுசங்க்னே 91 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். நிலைத்து நின்று விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். இறுதியாக ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஸ்மித் 131 ரன்கள் எடுத்தார்.

Image

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், பும்ரா, நவ்தீப் சைனி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதக் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித்தை ஜடேஜா ரன் அவுட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button