இந்தியாவில் ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று…

இந்தியாவில், புதிய உச்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரேநாளில் 685 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது. 9 லட்சத்து 10 ஆயிரத்து 319 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 கோடியே 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 9 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.