இந்தியா – சீனா இடையே நாளை 11வது சுற்று பேச்சுவார்த்தை

லடாக் எல்லையில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இந்தியா சீனா இடையேயான ராணுவ மட்டத்திலான 11-வது சுற்று பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது.

கிழக்கு லடாக் பகுதியில் கிட்டதட்ட 10 மாதங்களுக்கும் மேலாக சீன ராணுவத்தினர் படைகளை குவித்து தொடர் அத்து மீறல்கள் மூலம் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தனர்.

லடாக் பகுதியில் அமைதியை மீண்டும் மீட்டெடுக்க இரு நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் பலனாக பாங்காங் சோ ஏரி பகுதியில் இருந்து சீன படைகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டன.

இந்த நிலையில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் ஆகிய இடங்களில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 11-வது சுற்று பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தையானது சீனா எல்லையில் உள்ள மால்டோ பகுதியில் காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ளது.