மெட்ரோ ரயிலில் முகக்கவசம் அணியாத 672 பேருக்கு அபராதம்… டெல்லியில் அதிரடி நடவடிக்கை

டெல்லி மெட்ரோ ரயிலில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முகக் கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாதாலும் நேற்று ஒரேநாளில் மட்டும் 672 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.