இளைஞர்களுக்கு தடுப்பூசி…. நடிகர் சோனு சூட் மத்திய அரசிடம் கோரிக்கை..!!!

நாடு முழுவதும் 25 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவில் தொடங்க மத்திய அரசை நடிகர் சோனு சூட் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் அதிதீவிரமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1.26 லட்சம் பேருக்கு தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதிதீவிர பரவலை கருத்தில் கொண்டு 25 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என நடிகர் சோனு சூட் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கொரோனா தொற்றுக்கு குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், தான் சந்தித்த கொரோனா பாதிக்கப்பட்டோரில் பெரும் பகுதியினர் இளைஞர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.