கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்குக் கொரோனா உறுதி..!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட பரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது

கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், மத்திய அரசு மக்கள் முகக்கவசத்துடன் செல்லவேண்டுமெனக் கூறியுள்ளது. தக்கப் பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.