ஐதராபாத் உயிரியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று….

ஐதராபாத் உயிரியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த 8 சிங்கங்களும், ஆசிய சிங்கங்கள் எனவும், அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவை சரியான முறையில் உணவு உண்பதாகவும், சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பாதுகாப்பு கருதி அந்தப் பூங்கா மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு, உலகின் பல்வேறு இடங்களில் உள்ள பூங்காக்களில் பல விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் அவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்று பரவியதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Back to top button