கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்குவதிலும் ஊழல்….. பாஜக மீது சொந்த கட்சி எம்.பி. ஆதாரத்தோடு புகார்

பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் அளிப்பதில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா பாஜக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள படுக்கைகளில் 75 சதவீதத்தை அரசுக்கு வழங்க வேண்டும் என முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடமளிப்பதில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Tejasvi Surya gives privilege notice to Lok Sabha speaker against top West  Bengal police officials- The New Indian Express

சொந்த கட்சுயின் மீது அவர் குற்றச்சாட்டை எழுப்பியது மட்டுமில்லாமல் தகுந்த ஆதாரத்தோடு அதை அடுக்கடுக்காக அவர் நிரூபித்துள்ளார். இதனால் எடியூரப்பா அரசுக்கு எதிராக நெருக்கடி அதிகரித்துள்ளது.

Back to top button