ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பது இனப்படுகொலைக்குச் சமம்…. உயர்நீதிமன்றம் கருத்து

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்கு இணையான குற்றம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது தொடர்கதையாகியுள்ளது.

இந்த நிலையில் லக்னோ மற்றும் மீரட் மாவட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 19 பேர் உயிரிழந்திருப்பது தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது கொலைக்குற்றமாக கருதப்படும் எனவும் இக்கொலையானது இனப்படுகொலைக்கு இணையானது எனவும் மிக கடுமையாக சாடியுள்ளனர்.

Back to top button