சிறுபான்மையினருக்கும் வீடு வழங்கப்படும்… உள்துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரை

சிறுபான்மையினருக்கும் வீடுகள் வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கம்ருப் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

Image

அப்போது, சிறுபான்மையினர் இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என குற்றம்சாட்டினார்.

Image

மேலும் அனைவருக்கும் வீடு மற்றும் தண்ணீர் வழங்கப்படும் போது, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினருக்கும் கிடைக்கும் என குறிப்பிட்ட அவர், விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Back to top button