மீண்டும் உயர்வை நோக்கி ‘ராயல் என்ஃபீல்டு’ பைக்களின் விலை… புதிய விலை பட்டியல் உள்ளே..

350 சி.சி. திறன் எஞ்சின் கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலையேற்றம் இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் தமது பைக்குகளின் விலையில் இருந்து மூவாயிரம் ரூபாயை உயர்த்தியது.

அதனை தொடர்ந்து ஹிமாலயன் 650 சி.சி. அப்டேட் வெர்ஷன் பைக்குகளின் விலை அதிகரிக்கப்பட்டதால், ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 350 சிசி புல்லட் பைக்கின் விலை 7 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு, 1 லட்சத்து 61 ஆயிரத்து 385 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Classic 350 பைக்குகளின் விலை 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டு, 2 லட்சத்து 5 ஆயிரத்து 4 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதைப்போல Meteor 350 ரக பைக்குகள், 6 ஆயிரம் ரூபாய் வரை விலையேற்றம் கண்டுள்ளது.

ஹிமாலயன் அப்டேட் வெர்ஷன் பைக்குகளின் விலை, 2 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button