வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த இந்திய பாதுகாப்பு படையினர்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெளிநாட்டு பயங்கரவாதி உள்பட 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் நத்திபோரா பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தபடி வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். நேற்று மாலையில் தொடங்கிய இந்த சண்டை ஏறக்குறைய 6 மணிநேரங்களாக நீடித்தது.இந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

பின்னர் அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றது . இதில் அவர்கள், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது.

அவர்களில் ஒருவர் சோப்பூரின் ஹத்லாங்கூ பகுதியை சேர்ந்த உள்ளூர் பயங்கரவாதியான வாசிம் அகமது லோனே என்பதும் மற்றொருவர் வெளிநாட்டு பயங்கரவாதியான ஹமாஸ் என்ற அஸ்ரார் என்ற சரியா என்பதும் தெரிய வந்துள்ளது.

சரியா கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து வடக்கு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Back to top button