நியூசிலாந்திற்குள் இந்தியர்கள் நுழைய தடை விதிப்பு…

இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் நியூசிலாந்திற்குள் நுழைய அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தற்காலிக தடை விதித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஆண்டை விட மிகவும் மோசமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கூட இல்லாத அளவுக்கு தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது கட்டுக்கடங்காமல் போகிறது. இந்த நிலையில் தங்கள் நாட்டு குடிமக்கள் உள்பட இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் நியூசிலாந்திற்குள் நுழைய தற்காலிக தடை விதித்து அந்நாட்டுப் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவானது வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.