ஆண்களை பெண்கள் அடிக்கும் இந்தியாவில் கொண்டாடும் கோலாகல விழா..!!

பொதுவாக இந்தியாவில், ஆண்களை கடவுளாக பாவிக்கும் பெண்கள், ஆண்களை அடிக்கும் வினோத விளையாட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று இந்தியாவில் வருகிறது. அது தான் ‘லத்மர் ஹோலி’ என்பர்

வட மாநிலத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஹோலியும் ஒன்று. ஹோலியானது பங்குனி மாதம் வரும், பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும் விழா. ஹிந்து மதக்கடவுள் இராதா-கிருஷ்ணன், விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகை இராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. ஆண்டுதோறும் இவ்விழாவின் ஆங்கில மாத படி மாறுபடும். அவ்வாறு இந்த முறை வரும் மார்ச் மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது.

வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் சுமார் 1 வார காலமாக கொண்டாடுகின்றனர். வட மாநில திருமணத்தை போலவே ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர்.

அப்படி ஒரு நாளில் தான் ஆண்கள் பெண்களிடம் அடி வாங்கும் விளையாட்டு நடைபெறுகிறது. அதாவது ஆண்களை பெண்கள் தடியால் அடித்து விரட்டுவர், இதில் அடி வாங்கும் ஆண்கள் தங்களை கவசத்துடன் காத்துக்கொண்டு, பெண்களிடமிருந்து தப்பிக்க வேண்டும். இவ்விளையாட்டுக்கு ‘லத்மர் (லாத்மர்) என்ற பெயர் உண்டு.

லத்மர் (லாத்மர்):

புராணக்கதை படி, கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் இராதா இருக்கும் பிருந்தாவனத்திற்கு வருகிறார். அங்கு இராதா, தனது தோழிகளுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இராதாவின் விளையாட்டை ரசித்த கிருஷ்ணன், வழக்கம்போல் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர்களின் விளையாட்டில் இடையூறு ஏற்படுத்தி குறும்புத் தனம் செய்கின்றனர். இதனால் பொய்க்கோபம் கொண்ட இராதாவும் அவரது தோழிகளும், கையில் கிடைத்த தடியை எடுத்து செல்லமாக அடித்து விரட்டிவிட்டு பின் கொண்டாட்டங்களை தொடர்கின்றனர். இந்த விளையாட்டை தான் பல நூறு ஆண்டுகளாக மதுராவிலுள்ள இராதா கோவிலில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த கோவிட் காலத்தில் நேற்று தொடங்கிய ஹோலி பண்டிகை, வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இராதா போல் வேடமிட்டு தட்டியுடன் நிற்கும் பெண்களும், கிருஷ்ணன் போல் வேடமிட்டு கேடயத்துடன் நிற்கும் ஆண்களும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மத்தியில் கவர்ந்திழுக்கின்றனர்.