3வது முறையாக மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு…

3-ஆவது முறையாக மேற்குவங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்கவுள்ளார்.

மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக அம்மாநிலத்தின் முதலமைச்சராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்கிறார்.

முன்னதாக எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் ஜெகதீஷ் தன்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மம்தா பானர்ஜி.மேலும் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் வகையில், மம்தா பானர்ஜி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செயதார். நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது..

Back to top button