ரங்கசாமி தலையில் கைவைத்த அமித்ஷா… போனில் கண்ணீர்விட்டு கதறிய கொடுமை!!

புதுச்சேரியில் ஆட்சியை அமைத்தே தீரவேண்டும் என்று தேர்தலுக்கு முன்பே,தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுவந்தது பாஜக. இதனால் மேலிடப் பொறுப்பாளர்களாக ஒரு மத்திய அமைச்சர், கர்நாடக எம்.எல்.ஏ,கள் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகளை நியமித்திருந்தது. அது ரங்கசாமி மூலம் நடக்கப்போகிறது.

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் கூட்டணி சேர்ந்த அதிமுக, பாஜக போட்டியிட்டன. 16 தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10லும், 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 6 தொகுதிகளிலும், ஐந்தில் போட்டியிட்ட அதிமுக அனைத்தும் தோல்வியை சந்தித்தது. திமுக 6, காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றன. மேலும் 6 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவுக்குப் பிறகு சுயேச்சை வேட்பாளர்களை தொடர்புகொண்டார்கள் பாஜகவினர், ஆட்சியமைக்க உள்ளதால் ஆதரவு கேட்டுள்ளனர். அதுமட்டுமல்ல ரங்கசாமிக்கு தெரியாமல் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடமும் பேசிவந்துள்ளனர். எப்படியோ இந்த விஷயம் தெரிந்த ரங்கசாமி, அலறியடித்துக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தொடர்புகொண்டு, “கூட்டணியில நாங்க தான் அதிக தொகுதிகளில் ஜெயித்துள்ளோம்.. அதனால இப்போதைக்கு நானே முதல்வராக இருக்கிறேன். அதன் பின், நமச்சிவாயத்தை முதல்வராக்குங்கள், எனக்கு வேறு ஏதாவது மாநிலத்தில் எனக்கு கவர்னர் பதவி கொடுங்க என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

பேச்சு வார்த்தைகளுக்கு, பிறகு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் அர்ச்சுன் ராம் மெக்வாலைத் தொடர்புகொண்ட அமித்ஷா, பாஜகவுக்கு ஒரு துணை முதல்வர், இரண்டு அமைச்சர், துணை சபாநாயகர், என்.ஆர் காங்கிரசுக்கு முதல்வர் பதவி, இரண்டு அமைச்சர், ஒரு சபாநாயகர் என டீல் பேச சொல்லியிருக்கிறார். உடனடியாக டீல் பேச களமிறங்கியதில் சமரசம் செய்துகொள்ளாமல் அமித்ஷா சொன்னதை கறாராக பேசி முடித்துள்ளனர்.

அதன்படி முதல்வராக ரங்கசாமி இருப்பார், துணைமுதல்வராக நமச்சிவாயம், பாஜகவைச் சேர்ந்த ஜான் குமாருக்கும் ஏம்பலாம் செல்வத்துக்கும் அமைச்சர் பதவிகள், அதேபோல ராஜவேலுக்கும், தேனி ஜெயக்குமாருக்கும் அமைச்சர் பதவி வழங்கவுக்குள்ளதாக தெரிகிறது.

Back to top button