மம்தா பானா்ஜிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து….!!

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மம்தா பானா்ஜிக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

முன்னதாக எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் ஜெகதீஷ் தன்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மம்தா பானர்ஜி.

மேலும் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் வகையில், மம்தா பானர்ஜி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் முதல்வராக தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானா்ஜி பதவி ஏற்றுள்ளாா். இவருக்கு மாநில ஆளுநா் ஜெகதீப் தங்கர் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Back to top button