உயிருக்கு போராடிய இளம்பெண்னை காப்பாற்றிய சோனு சூட்…. பெருகி வரும் பாராட்டுக்கள்

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனாவின் 2வது அலையில் சிக்கி மக்கள் தத்தளித்து வருகிறார்கள்.

கொரோனாவிற்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சோனு சூட் கொரோனா பாதித்த பெண்ணுக்கு உதவி செய்துள்ளார்.

நாக்பூரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரின் உடலில் முன்னேற்றம் இல்லாததையடுத்து உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறுவுத்தினர்.

அந்த பெண்ணின் குடும்பத்தின் மருத்துவமனையை தேடி அலைத்தனர். மருத்துவமனை கிடைக்காததால் , சோனுசூட் உதவியை நாடிஉள்ளனர்.

இதையடுத்து சோனுசூட் தனது சொந்த செலவில் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் விமானத்தின் மூலம் அவரை அனுப்பி உள்ளார்.

தற்போது அந்த பெண் ஹைதராபாத் மருத்துவமனையில் நலமாக உள்ளார். அவரின் இந்த மனிதநேயம் குறித்து சமூகவலைத்தளத்தில்  பாராட்டுக்களை தெரிவித்து  வருகின்றன

Back to top button