நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை எதுவும் இல்லை: சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கம்…

நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை எதுவும் இல்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கமளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி இன்னும் முன்று நாட்களில் தீர்ந்து விடும் என அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப்பின் அறிக்கை முற்றிலும் பொறுப்பற்றது எனவும் இது பொதுமக்களை தவறாக வழிநடத்தவும், மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வழிவகுக்கும் எனவும் சாடினார்.

கொரோனாவை எதிர்கொள்வதில் மகாராஷ்டிர அரசு தோல்வியடைந்துவிட்டதை மக்களுடம் இருந்து திசை திருப்பவே இவ்வாறு குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் சாடினார். நாட்டில் எந்த மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை எதுவும் இல்லை எனவும் மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.