தோற்ற மமதா பானர்ஜி முதல்வராக கூடாது… திரிபுரா முதல்வர் எதிர்ப்பு…

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மமதா பானர்ஜி முதல்வராக கூடாது என திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 212 இடங்களில் வென்றது. இதனால் 3வது முறையாக அங்கு அக்கட்சி ஆட்சியில் அமர்கிறது. ஆனால் தி.கா.கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது மாநிலத்தின் பல பகுதிகளில் தங்கள் மீது ஆளும் திரிணாமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியது. இதனிடையே மேற்குவங்க முதல்வராக மமதா பானர்ஜி இன்று பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் மமதா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்து விட்டார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எப்படி முதல்வராக முடியும். திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் வேறு ஒருவரே முதல்வர் பதவியில் அமர வேண்டும் என திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் தேவ் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Back to top button