திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து… அதிர்ச்சி அறிவிப்பு

கொரோனா அதிகரித்து வருவதால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல்  இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் திங்கட்கிழமை வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 13 ஆம் தேதி முதல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.