புதுச்சேரியில் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி..!! தமிழிசை செளந்ரராஜன்

புதுச்சேரியில் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்ரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை 43 ஆயிரத்து, 242 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கொரோனா பரிசோதனை மையங்களுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,புதுச்சேரியில் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி போட திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.